புதன், ஆகஸ்ட் 17, 2016

குறள் எண்: 0381 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0381}

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

விழியப்பன் விளக்கம்: இணையற்ற “படைபலம்/குடிமக்கள்/உணவு/அமைசர்கள்/நட்பு/கோட்டை” எனும் ஆறுமடைய அரசன், அரசர்களில் சிங்கம் போன்றவன்.
(அது போல்...)
ஒப்பற்ற “அரசாங்கம்/இராணுவம்/அறவொழுக்கம்/தேசப்பற்று/சுயசிந்தனை/நல்லிணக்கம்” எனும் ஆறுமுடைய நாடு, உலக நாடுகளில் வல்லரசாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக