சனி, ஆகஸ்ட் 06, 2016

குறள் எண்: 0370 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0370}

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

விழியப்பன் விளக்கம்: ஒருபோதும் நிறைவளிக்காத இயல்புடைய, ஆசையை நீக்கிடின்; அந்நிலைப்பாடே, மாறாத இயல்புடன் இருக்கும் வாழ்வை அளிக்கும்.
(அது போல்...)
எவருக்கும் பயனளிக்காத குணமான, புரளியை நிறுத்திடின்; அம்முடிவே, குறையாத மகிழ்வுடன் இருக்கும் குணத்தை அளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக