செவ்வாய், ஆகஸ்ட் 09, 2016

குறள் எண்: 0373 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0373}

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யறிவே மிகும்

விழியப்பன் விளக்கம்: சிந்தனையை விதைக்கும், பல நூல்களைக் கற்றாலும்;  உண்மையான அறிவாகிய ஊழைப் பொறுத்தே, ஒருவரின் அறிவு மேலோங்கும்.
(அது போல்...)
சமுதாயத்தை மேன்மிக்கும், பல வழிமுறைகளை அறிந்தாலும்; சரியான காரணியாகிய சுற்றத்தைப் பொறுத்தே, ஒருவரின் பொதுப்பணி சிறக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக