திங்கள், ஆகஸ்ட் 08, 2016

குறள் எண்: 0372 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0372}

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை

விழியப்பன் விளக்கம்: அழிவதற்கு ஆதாரமான ஊழ் இருப்பின், அறியாமை சூழ்ந்திடும்; ஆக்கத்திற்கு ஆதாரமான ஊழ் இருப்பின், பகுத்தறிவு மேம்படும்.
(அது போல்...)
தீமைக்கு வித்திடும் செயல்கள் செய்திடின், அகந்தை பிறந்திடும்; நன்மைக்கு வித்திடும் செயல்கள் செய்திடின், மனிதம் விளைந்திடும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக