செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

குறள் எண்: 0366 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0366}

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

விழியப்பன் விளக்கம்: ஆசையே, ஒருவரை வஞ்சித்து அழிக்கிறது! எனவே, அந்த ஆசைக்கு பயந்து வாழ்வதே அறமாகும்.
(அது போல்...)
சமமின்மையே, பெண்டிரைக் கொடுமைப்படுத்தி ஒடுக்குகிறது! ஆதலால், அந்த சமமின்மைக்கு எதிராய் செயல்படுவதே நியதியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக