புதன், ஆகஸ்ட் 03, 2016

இரண்டாம் ஆண்டு துவக்கம்...


     திருக்குறளுக்கான விளக்கவுரை எழுதும் பணியில், இன்று குறள் எண்: 0367-இற்கான விளக்கவுரையை பதிந்திருக்கிறேன். இதுவரை 366 குறள்களுக்கான விளக்கவுரை முடிந்த நிலையில், மிகசரியாய் இன்று - இரண்டாம் ஆண்டு துவங்குகிறது. இன்னும் நீண்ட நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். உங்களின் அன்புடனும்; நம் பெருந்தகையின் ஆசியுடனும் - என் பணி செவ்வனே தொடர்ந்து நடந்தேறும் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது. இன்றுவரை, ஒரு நாள் கூட தடைபடாமல் - பெருந்தகையின் அருளுடன் எழுதி இருக்கிறேன். இனியும், எந்த தடையும் இன்றி "தினம் ஒரு குறள்" என்ற என் நிலைப்பாட்டில் தொடர்ந்திட - உங்கள் அனைவரின் அன்பையும்/ஆசியையும் வேண்டுகிறேன்.

தொடர்வோம் - நம் பெருந்தகையின் அருளுடன்! 
முடிப்போம் - நம் வாழ்வை பொருளுடன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக