வியாழன், ஆகஸ்ட் 11, 2016

குறள் எண்: 0375 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0375}

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

விழியப்பன் விளக்கம்: செல்வத்தை உயர்த்தும் முனைப்பில் - நல்லவை எல்லாம் தீயவையாவதும்; தீயவை எல்லாம் நல்லதாவதும் - ஊழை ஒட்டியே அமையும்.
(அது போல்...)
சுயத்தை மேம்படுத்தும் முயற்சியில் - எளியவை யாவும் சிரமமாவதும்; சிரமங்கள் யாவும் எளியதாவதும் - வைராக்கியத்தைப் பொறுத்தே நிர்ணயமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக