திங்கள், ஆகஸ்ட் 15, 2016

குறள் எண்: 0379 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 04 - ஊழியல்; அதிகாரம்: 038 - ஊழ்; குறள் எண்: 0379}

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

விழியப்பன் விளக்கம்: நல்வினைகள் நிகழும்போது, "தம்மால் என" அகம் மகிழ்வோர்; தீவினைகள் நிகழும்போது, சோர்வடைந்து ஊழைப் பழிக்கூறுவது ஏனோ?
(அது போல்...)
புகழ் சேர்க்கும்போது, "தாமே காரணமென" மார்தட்டும் பெற்றோர்; அவமானம் சேர்க்கும்போது, விமர்சித்துப் பிள்ளைகளைத் தண்டிப்பது ஏனோ?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக