செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016

மார்ஃபிங்கும் - மரித்திட்ட மானுடமும்...


அப்பாவி துவங்கி;
அரசியல்வாதி வரையிலும்...
அழிவுகள் தொடர்கின்றன!
அறம்மீறிய செயல்களால்...

வென்றது "மார்ஃபிங்"கா?
வீழ்ந்தது மானங்களா??
வாதமேயின்றி; இங்கே...
வீழ்ந்தது மானுடமே!!

படைத்தவன் மட்டுமல்ல;
பகிர்பவனும் குற்றவாளியே!
பழிக்கஞ்சும் ஆன்மாக்களை;
பலியிடுவது - மனிதமற்ற...

உறவுகளும், உணர்வுகளுமே!!
உறவுகள், உணர்வுகளுக்கு;
உரமிட்டு - "மார்ஃபிங்"கை
உலையிடுவோம் வாரீர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக