செவ்வாய், செப்டம்பர் 06, 2016

கடவுள் போதை!


"பலசரக்குகளை ருசிச்சிருக்கேன்"
"பலமணிநேரம் சாமிகும்பிடுவேன்"
இரண்டுக்கும்அதி வித்தியாசமில்லை;
இறைவன்பக்தியும் ஓர்போதையே!

குடித்தல்புகைத்தல் கஞ்சாகடவுள்
காரணிகள்எது வாயினும்,அவற்றின்
குறிக்கோள்;மகிழ்ச்சி யெனும்போதையே
காரணியின்அளவு வரையறைமீறிடின்

காரணியெதுவென அலசல்அவசியமன்று!
சாராயமயக்கத்தில் இருப்பதால்மனித
சுயத்திற்குத்தான் அழிவுண்டாகும்;
சாமியின்மயக்கமோ மனிதகுலத்தையே

பேரழிவிற்குஆட் படுத்திடும்;உணர்வீர்!
போதைப்பொருளில் மட்டுமல்லஇறை
நம்பிக்கையிலும் அளவுகோல்வேண்டும்
வீம்புசேர்நம்பிக் கையும்போதையைக்

கொடுக்கும்;போதையில் ஏதுபேதமேதும்?
கடவுளோகுடியோ அளவுக்குமிஞ்சின்
முறையற்றபோதையே! இருக்கட்டும்அந்த
இறைநம்பிக்கையா வதுபோதையின்றியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக