சனி, செப்டம்பர் 10, 2016

குறள்(தரு) கவிதை

{முன்குறிப்பு: இதில் இடம்பெற்றுள்ள குறள்களுக்கு,
நான் எழுதிய விளக்கவுரையின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்;
"இளைதாக முள்மரம் கொல்க" குறளின் விளக்கவுரையை இன்னும் பதியவில்லை}

"கர முதல எழுத்தெல்லாம்" என்பதையுணர்ந்து தாய்மொழியை உள்வாங்கி
"ற்றுவார் ஆற்றல் பசியாற்றல்" அறிந்து ஈகைக்குணம் பெருக்கி
"ளைதாக முள்மரம் கொல்க" கற்று இளமையில் "குறை"களைந்து
"ன்ற பொழுதிற் பெரிதுவக்கும்" தாய்போல் நம்பெற்றோரை மகிழ்வித்து
"டையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங்" கற்று மனிதத்தை விதையாக்கி
"ழிற் பெருவலி யாவுள" என்பதுணர்ந்து வரும்தடைகளைக் கடந்து
"ந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்" என்பதால் நன்றியுணர்வு கொண்டு
"ரின் உழாஅர் உழவர்" நினைவில்நிறுத்தி இயற்கையை மதித்து
"ந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு" சிறப்புணர்ந்து ஐம்புலன்களை அடக்கி
"ல்லும் வகையான் அறவினை" மதித்து செய்செயல்களில் அறம்காத்து
"ர்த்துள்ளம் உள்ளது உணரின்" பொருளுணர்ந்து மறுபிறப்புப் பிணிமறந்து
"ஒளவையின் ஆத்திச்சூடி" உரைப்பவைகளை உறுதியாய் ஏற்று
"அகி அகன்ற அறிவென்னாம்" அறிந்து பிறர்பொருளையும் காப்பதே...

வாழ்க்கைத் தத்துவம்!!! 

{பின்குறிப்பு: திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே எழுத்து "ஒள" மட்டுமே! ஒருவேளை, ஒளவைக்கு பெருமை சேர்ப்பதற்காக விட்டிடுப்பாரோ, நம் பெருந்தகை? அவ்வெழுத்துக்கு ஒளவையின் ஆத்திச்சூடியைப் பயன்படுத்தி இருக்கிறேன்} 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக