சனி, செப்டம்பர் 03, 2016

குறள் எண்: 0398 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0398}

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: ஒரு பிறப்பில், ஒருவர் கற்ற கல்வி; அவருக்கு அப்பிறவி மட்டுமன்றி, ஏழு பிறவிகளிலும் நன்மையளிக்கும் தன்மையுடையது.  
(அது போல்...)
ஒரு சமயத்தில், ஒருவர் செய்த பொதுப்பணி; அவரின் தலைமுறை மட்டுமன்றி, மற்ற தலைமுறைக்கும்  புகழளிக்கும் வலிமையுடையது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக