செவ்வாய், செப்டம்பர் 13, 2016

குறள் எண்: 0408 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0408}

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு

விழியப்பன் விளக்கம்: கற்றறிந்த நல்லவர்களுக்கு நேரும், வறுமையை விட; கற்காதவர்களிடம் சேரும் செல்வம், அதீத துன்பமானதாகும்.
(அது போல்...)
நேர்மையான அறமுணர்ந்தோர் அடையும், தோல்வியை விட; நேர்மையற்றோர் அடையும் வெற்றி, அதிக கொடியதாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக