ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

குறள் எண்: 0413 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 042 - கேள்வி; குறள் எண்: 0413}

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

விழியப்பன் விளக்கம்: இப்புவியுலகில், செவிக்கு உணவான கேள்வியறிவைக் கொண்டிருப்போர்; வேள்வியில் வார்க்கும் நெய் போன்றவற்றை உணவாக கொள்ளும், தேவர்களுக்கு இணையானவர் ஆவர்.
(அது போல்...)
இச்சமூகத்தில், பேரின்பம் அளிக்கும் பொதுநலனைப் பேணுவோர்; உடம்பில் இருக்கும் உயிரணு போன்றவற்றை அங்கமாக அளிக்கும், இயற்கைக்கு ஒப்பானவர் ஆவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக