வியாழன், செப்டம்பர் 15, 2016

குறள் எண்: 0410 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 041 - கல்லாமை; குறள் எண்: 0410}

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறிவை விரிவாக்கும் நூல்களைக் கற்றவருடன், மற்றவர்களை ஒப்பிடுதல்; விலங்குகளோடு, மனிதர்களை ஒப்பிடுவதற்கு இணையாகும்.
(அது போல்...)
நலிந்தோரை வாழ்விக்கும் அரசாட்சியை அளிப்பவருடன், பிறரை ஒப்பிடுதல்; பொன்னுடன், பித்தளையை ஒப்பிடுவதற்குச் சமமாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக